உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் தீயணைப்பு துறையினருக்கு பாம்பு பிடிக்கும் கருவிகள் வழங்கல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில், வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் விஷப் பாம்புகள் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் வருவதால், விஷப் பாம்புகளை பிடிப்பதற்காக தீயணைப்பு நிலையத்திற்கு இரண்டு பாம்பு பிடிக்கும் கருவிகளை ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் சரவணன், உதவி ஆளுநர் இளங்கோவன்ஆகியோர் முன்னிலையில் தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு ரமேஷ், உதவி அலுவலர் சக்திவேல் ஆகியோரிடம் வழங்கப்பட்டன, இதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டையை அடுத்த ஏ.குமாரமங்கலம் கிராமப் பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி எதிரில் நெடுஞ்சாலையில் வைப்பதற்காக இரண்டு பேரிகார்டுகளை  உளுந்தூர்பேட்டை உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்  மகேஷிடம்  வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது  ரோட்டரி சங்கத் தலைவர் தெய்வீகன், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் பாபு, மாவட்ட திட்டத் தலைவர் வின்சென்ட், மண்டலத் தலைவர்கள், திட்டத் தலைவர்கள் அன்பழகன், திலீப், வெங்கடாஜலபதி, வருங்கால உதவி ஆளுநர் அன்பழகன், சாசனத் தலைவர் வசந்தகுமார் வருங்காலத் தலைவர் செந்தில்குமார், பொருளாளர் வெங்கடேஷ், முன்னாள் பொருளாளர் சீனிவாசன், முன்னாள் தலைவர்கள் சுரேஷ்குமார், முன்னாள் செயலர்கள் முத்துக்குமாரசாமி, அருள்,சாமிநாதன்,ஜீவரத்தினம் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் காவல்துறை போக்குவரத்து ஆய்வாளர் கோவிந்தசாமி உதவி ஆய்வாளர்  மணிவண்ணன், தீயணைப்பு துறை வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 1 =