உளுந்தூர்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை – திருச்சி சாலையில் ரூபாய் 58 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள போக்குவரத்து காவல் நிலையத்தை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதனையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுப்புராயன் கலந்துகொண்டு போக்குவரத்து காவல் நிலையத்தில் குத்துவிளக்கேற்றி பணிகளை துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். அப்பொழுது உளுந்தூர்பேட்டை உட்கோட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிஎம்.ஆர்.மணிமொழியன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்பன்டராஜ், உளுந்தூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராஜா, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜி, போக்குவரத்து உதவி ஆய்வாளர் இளையராஜா மற்றும் இருபால் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.