உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் சமரசம் மற்றும் தீர்வு மையம் திறப்பு

உளுந்தூர்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரசம் மற்றும் தீர்வு மையம் இன்று சார்பு நீதிபதி ஸ்ரீராம் திறந்து வைத்தார். உடன் குற்றவியல் நீதித்துறை நீதிபதி விஜயராஜேஷ் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் சமரச மையத்தின் முக்கியத்துவம் மற்றும் செயல்பாடு குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் வெங்கடேசன், செயலாளர் திலீப், பொருளாளர் ஏழுமலை, சமரச வழக்கறிஞர்கள் அண்ணாதுரை, செல்வராஜ், ஆறுமுகம் மற்றும் வழக்கறிஞர்கள் காமராஜ், மணிகண்டன், ஆனந்த், அரசு வழக்கறிஞர் வெங்கடேசன்,அரசு குற்றவியல் வழக்கறிஞர் சுமதி மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.