உளுந்தூர்பேட்டை நகர திமுக இளைஞர் அணி சார்பில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகர  திமுக இளைஞரணி சார்பில், தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்  உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இந்த சாதனை விளக்க தெருமுனை கூட்டம்  நகரச் செயலாளர் டேனியல்ராஜ் தலைமையில், சிறப்பு அழைப்பாளர்களாக உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் மற்றும் தலைமை கழக பேச்சாளர் ஆரணி மாலா ஆகியோர் கலந்துகொண்டு திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை பொதுமக்கள் இடையே எடுத்துக் கூறி சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளரும்  நகர்மன்ற தலைவருமான திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளரும்  நகர்மன்ற துணைத் தலைவருமான வைத்தியநாதன், ஒன்றிய செயலாளரும்  ஒன்றியக் குழு தலைவருமான ராஜவேல்,  தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட கழக பொருளாளர் ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்லையா, ஆசிர்வாதம், ஒன்றியக் குழு துணைத் தலைவர் இளங்கோவன் மற்றும் மாவட்ட ஒன்றிய  நகர நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 1