பின்னர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட பொழுது, தென்காசி மாவட்டம் மேல்நகரம், நன்னகரம் கிராமத்தை சேர்ந்த ராமையா மகன் ராமமூர்த்தி (33), என்பவர் கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கனரக லாரியில், மின்சார வாரிய உபகரணங்களை ஏற்றிக்கொண்டு சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்ததால், இச்சம்பவம் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது, மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.