உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய கோர விபத்தில் 2 பேர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புறவழிச்சாலையில் நேற்று அதிகாலை சென்னையிலிருந்து போடி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து, இரும்பு கம்பிகள் ஏற்றிக்கொண்டு முன்னாள் சென்றுகொண்டிருந்த  டாரஸ் லாரியை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக லாரியின் மீது மோதி ஏற்பட்ட கோர விபத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் மற்றும் மாற்று ஓட்டுநர் சிவா,  சுருளிமுத்து ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் ஆம்னி பேருந்து பின்னால் சென்று கொண்டிருந்த கார் ஒன்றும் ஆம்னி பேருந்தின் மீது  மோதி விபத்து ஏற்பட்டதில் காரில் பயணம் செய்தவர்கள் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர் .

இத்தகவலறிந்த உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்த ஓட்டுநர்களின் உடல்களை நவீன ஹைட்ராலிக் பொக்லைன் இயந்திரத்தின் வாயிலாக கடும் போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.

பின்னர் இறந்தவர்களின் உடல்களை உடற்கூறு ஆய்விற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தொடர்ந்து  இந்த விபத்து குறித்து காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 2 =