உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி மூன்று வயது குழந்தை பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட  கூவாகம்   கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஏழுமலை ராசாத்தி தம்பதியினருக்கு  சர்வேஸ்வரசாமி என்ற மூன்று வயது ஆண் குழந்தை இருந்து, இந்நிலையில்,

நேற்று காலை  விவசாய நிலத்தில் களை எடுப்பதற்காக குழந்தையுடன்  ராசாத்தி சென்றுள்ளார். அங்கு குழந்தையை விவசாய நிலத்திற்கு அருகில் விளையாடும் படி  விட்டு விட்டு வயலில் களை எடுத்துக் கொண்டிருந்தாக தெரிகிறது. அப்போது  விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் அலறல்  சத்தம் கேட்டு தாய் ராசாத்தி பதறி அடித்து சென்று பார்த்த பொழுது, அங்கு குழந்தை  அறுந்து கிடந்த மின்சார கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கியதில் குழந்தை  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதை பார்த்த தாய்  கதறிய படி சத்தம் போட்டுள்ளார்,

அலறல் சத்தத்தை கேட்ட அருகில் இருந்த பொதுமக்கள் விரைந்து மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டித்து உயிரிழந்த குழந்தையை மீட்டுள்ளனர்.

இத்தகவலறிந்த திருநாவலூர் காவல் துறையினர் மற்றும் மின்சார துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மூன்று வயது ஆண் குழந்தை மின்சாரத்தில்  சிக்கி உயிரிழந்த இச்சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அறுந்து கிடந்த மின்கம்பியை  சரி செய்ய  அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், அதிகாரிகள் சரி செய்யாமல் அலட்சியம் காட்டியதால் தான் இச்சிறுவனின் உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டதாக, கிராம பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் அனைத்து மின்வாரிய அலுவலகத்திலும் போதுமான பணியாளர்கள்  இல்லாததும், பணியாளர்களுக்கு பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாக தெரியாததும்,  இது போன்ற உயிரிழப்பிற்கு காரணமாக இருக்கிறது. எனவே தமிழக அரசு மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை முறையாக தொழிற்கல்வி (ஐ.டி.ஐ) முடித்து காத்திருப்பவர்களை பணியில் அமர்த்தினால்  இதுபோன்ற விபத்துகள் குறையுமென சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

51 + = 56