உளுந்தூர்பேட்டை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 3 பேர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலை  சென்னை – திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்  பு.மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அருகே இன்று அதிகாலை கார் ஒன்று  பள்ளத்தில் கவிந்து மரத்தின் மீது மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த ஐந்து பேரில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இத்தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பாவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இரண்டு நபர்களை நவீன கிரேன் மூலம் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மூன்று  உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில், சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த உசேன் மனைவி ஷமீம் வயது 50, உசேன் மகள் அம்ரின் வயது 22, சையத்அமீனுதின் மகள் சுபேதா வயது 21, ஆகியோர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது, இவர்கள் சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று சொந்த ஊரான சென்னைக்கு சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது என தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 65 = 70