உளுந்தூர்பேட்டை அருகே காதலியை கரம் பிடிக்க மறுத்த அரசு ஊழியருக்கு சிறை

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மனங்கூர்  கிராமத்தை சேர்ந்த, தவபாலன் மகன் தமிழழகன்(27), இவர்  திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு ஊழியராக  பணிபுரிந்து வருகிறார்.

அதே நேரத்தில் கடந்த சில மாதங்களாக தமிழழகன்,  இதே கிராமத்தை சேர்ந்த தனது உறவினரான இளங்கோவன் மகள் பிரியா(22), என்பவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி காதலித்து வந்ததாக தெரிகிறது.

ஆனால் கடந்த 3-ம்  தேதி திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் தமிழழகன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியா உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரை பெற்றுக் கொண்ட காவல் நிலைய ஆய்வாளர் விஜி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தமிழழகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, பல திடுக்கிடும் தகவல்களை தமிழழகன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார்  பொறியியல் கல்லூரியில் படிக்கும் பொழுது அதே கல்லூரியில் படித்த  சென்னை பகுதியை சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணை  காதலித்து வந்ததாகவும், கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி சென்னையில் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

கைது செய்த தமிழழகன் மீது காவல் துறையினர்  வழக்கு பதிவு செய்து உளுந்தூர்பேட்டை  நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

21 − 13 =