உளுந்தூர்பேட்டை அருகே எம்.குன்னத்தூர் கிராமத்தில் மழைகால சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எம்.குன்னத்தூர் கிராமத்தில் விழுப்புரம் மாவட்ட கால்நடை துறை சார்பாக மழைகால சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. மழை காலம் என்பதாலும், தொடர் மழையின் காரணத்தாலும் கால்நடைகளுக்கு நோய்கள் ஏற்படும் என்பதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராஜா, ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர் ஆறுமுகம், ஊராட்சி மன்றத் தலைவர் சிவா ஆகியோரின் ஏற்பாட்டில் உளுந்தூர்பேட்டை கால்நடை மருத்துவமனை உதவி இயக்குனர் தமிழரசன், நத்தாமூர் கால்நடை உதவி மருத்துவர்கள் தமிழ்மணி, சங்கர்கணேஷ் மற்றும் கால்நடை உதவியாளர்கள் முருகன், கொளஞ்சி ஆகியோர் கொண்ட குழு நேற்று குன்னத்தூர் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் கலந்து கொண்டனர். 

இம்முகாமிற்கு பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களுடைய கால்நடைகளை கொண்டு வந்து நோய் எதிர்ப்பு ஊசி செலுத்திக் கொண்டும், மேலும்  கால்நடைகளுக்கு தேவையான  மாத்திரைகள் மற்றும் மருந்துகளையும் பெற்றுச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 4 = 2