கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மணிக்கூண்டு திடலில் நடைபெற்றது.
இப்பொதுக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு தலைமையில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் செண்பகவேல், மணிராஜ், ஏகாம்பரம், சந்திரன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் சாய்ராம், மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்கியராஜ், நகர செயலாளர் துரை, லயன் வெங்கடேசன், வழக்கறிஞர் திலிப், சாய்அருண், கோபால், மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.