தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள், ஜெயலலிதாவின் திருவுருவ சிலை மற்றும் திருஉருவ படத்திற்கு மலர்தூவி பிறந்தநாள் விழா கொண்டாடி வருகின்றனர், மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர், இதன் ஒரு பகுதியாக,
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில், மாவட்டச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரின் வழிகாட்டுதலின்படி, விநாயகா கல்வி குழுமத்தின் தலைவர் நமச்சிவாயம் தலைமையில், உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவச்சிலைக்கு கழகத் தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்கள், இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வின் போது முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் சாய்ராம் மற்றும் லயன் வெங்கடேசன், சாய் அருண் மற்றும் கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.