உளுந்தூர்பேட்டையில் மாற்றுத்திறன் மாணவர்கள் பற்றிய விழிப்புணர்வு பேரணி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ், உளுந்தூர்பேட்டை வட்டார வளமையம் சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தினம் முன்னிட்டு, மாற்றுத்திறன் மாணவர்கள் பற்றிய விழிப்புணர்வு பேரணி ஊராட்சி ஒன்றிய இந்து நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இப்பேரணியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருன்செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி பள்ளி வளாகத்தில் துவங்கி மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம் வழியாக திருச்சி செல்லும் சந்திப்பு சாலைவரை சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது.

விழிப்புணர்வு பேரணியில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுடன் அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பாதகைகள் ஏந்தியபடி சென்றனர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் சக்திவேல், காசிலிங்கம், அரசு, சுரேஷ், ஆறுமுகம், ரேஷ்மா, சாந்தகுமாரி, சரிதா, ரம்யா, சிறப்பு பயிற்றுநர்கள் கோமதி, ராஜலட்சுமி, சரன்யா, ராதா, புஷ்பா மற்றும் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சிறப்பு பயிற்றுநர் ஜானகிராமன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

31 + = 39