உளுந்தூர்பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், உளுந்தூர்பேட்டை மற்றும் எலவனாசூர்கோட்டை பகுதிகளில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யும் காவல்துறையின் செயலை கண்டித்து, கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் ராஜா தலைமையில்,வன்னியர் சங்க மாநிலத் தலைவர் அருள்மொழி கண்டன உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து நகராட்சியில் உள்ள பல்வேறு இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிகள் ஏற்றப்பட்டன, இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.