கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை, மணிக்கூண்டு திடலில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை பகுதி பத்திரிகையாளர்கள் சார்பில் பழங்குடி இருளர் இனமக்கள் மற்றும் நரிக்குறவர் இன மக்களுடன் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம் அம்பா மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து, இருளர் இனமக்கள் மற்றும் நரிக்குறவர் இனமக்கள், ஆதரவற்ற முதியோர்கள் சுமார் 150 க்கும் மேற்பட்டோர்களுக்கு புத்தாடை, செங்கரும்பு மற்றும் இனிப்புகள் வழங்கி சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது, இவ்விழாவில் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவின் போது பிரெஞ்சு நாட்டை சேர்ந்தவர்கள் சமத்துவ பொங்கல் விழாவை ஆர்வமுடன் கண்டு களித்தனர், தொடர்ந்து இருளர் மற்றும் நரிக்குறவர் இனமக்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.