கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சியில், அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளான நாட்டியாஞ்சலி, பட்டிமன்றம், இன்னிசைக் கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பங்குனி உத்திர திருநாளான இன்று 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலில் பால தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.இவ்விழாவில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தனியார் நிறுவனங்கள், காலை முதல் மாலை வரை அன்னதானம், மோர், இளநீர், உள்ளிட்டவைகளை பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு வழங்கினர்.