
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வு மற்றும் கட்டணத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி தேமுதிக தலைவர் விஜயகாந்தின் ஆணைக்கிணங்க தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் தேமுதிகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர், இதன் ஒரு பகுதியாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் சுங்க கட்டண உயர்வை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்து செங்குறிச்சி சுங்கச்சாவடியை மாவட்ட துணை செயலாளர் குழந்தைவேல் தலைமையில், தேமுதிகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர், இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கழக பொருளாளர் கருணாகரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
உளுந்தூர்பேட்டை உட்கோட்ட காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுங்கச்சாவடி அருகே தற்காலிக தடுப்பு கட்டை அமைத்து போராட்டம் நடத்திய சுமார் 150-க்கும் மேற்பட்ட தேமுதிகவினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர், திருமண மண்டபத்தில் மின்விசிறி மற்றும் எந்தவித வசதியும் இல்லையென தேமுதிகவினர் குற்றம் சாட்டினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருநாவலூர் ஒன்றிய செயலாளர்கள் திருமுருகன், வெங்கடேசன், உளுந்தூர்பேட்டை ஒன்றிய செயலாளர்கள் அருள், திருமால் திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் காமராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் தவமணி, பொதுக்குழு உறுப்பினர் கலையரசன், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட மாணவரணி செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் வெங்கடேசன், உளுந்தூர்பேட்டை நகர அவை தலைவர் ஜோதிலிங்கம், நகர பொருளாளர் மணிகண்டன், நகர துணை செயலாளர் ராஜ்திலக், அப்பாஸ்அலி, மாவட்ட பிரதிநிதி இப்ராஹிம், முருகன், ஒன்றிய நிர்வாகிகள் ஏழுமலை, மணிகண்டன், பழனிவேல், ஞானவேல், சம்பத்குமார் ,வீராசாமி, முனியன் ,பிரபாகரன், சக்திவேல் ,ஜெயபால், செல்வம் ,ராஜீவ் காந்தி, பச்சமுத்து, ஏழுமலை, வடிவேல், சதீஷ்குமார், சக்கரவர்த்தி, உதயகுமார், தனசேகர், கங்கா, செந்தில், முருகன் , முரளி, கோபால், சௌந்தர்ராஜன், செல்வராஜ், அஜித், மற்றும் தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.