உளுந்தூர்பேட்டையில் குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை மனுவை அனுப்பி வைக்க வேண்டி மனு

இந்திய குடியரசுத் தலைவருக்கு  கோரிக்கை மனுவை அனுப்பி வைக்க வேண்டி  பாரதீய கிசான் சங்கம் சார்பில்  உளுந்தூர்பேட்டை வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்தியா முழுவதும்  ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை பாரதீய கிசான் சங்கம் சார்பில் விவசாயிகளின் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து இன்று குடியரசுத் தலைவருக்கு  விவசாயிகளின் கோரிக்கை மனுவை அனுப்பி வைக்குமாறு நாட்டில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் கோரிக்கை மனுவை வட்டாட்சியரிடம் அளிக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பாரதீய கிசான் சங்கம் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளர் சுபாஷ் தலைமையில், உளுந்தூர்பேட்டை ஒன்றிய பொறுப்பாளர் ராஜலிங்கம், திருநாவலூர் ஒன்றிய பொறுப்பாளர் மருத்துவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் இந்திய குடியரசு தலைவருக்கு விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை அனுப்பிவைக்குமாறு உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணனிடம் மனுவை அளித்தனர்.

இம்மனுவில் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வேண்டியும், விவசாயிகளை சுயசார்பு உடையவர்களாக உருவாக்கவும், 75வது சுதந்திர தின ஆண்டிலிருந்து இடைத்தரகர்களிடம் இருந்து விவசாயிகளை காப்பாற்றுமாறும் ,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு மற்றும் கச்சிராபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க ஆவணம் செய்ய வேண்டியும்,  தியாகதுருகம் தரணி சர்க்கரை ஆலையில் மூன்று வருடங்களாக விவசாயிகளுக்கு கரும்பு பணம் கொடுக்காமல் இழுத்தடிக்கும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  என பல்வேறு கோரிக்கைகள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 4 =