உளுந்தூர்பேட்டையில் காணாமல் போன ஏரி குளங்களை மீட்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நன்னாவரம் மற்றும் ஆத்தூர் ஊராட்சிகளில் உள்ள   ஏரி, குளங்களில் செய்யப்பட்டுள்ள  ஆக்கிரமிப்புகளை  அகற்றி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் சார்பில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  மாவட்ட செயற்குழு உறுப்பினரும், ஒன்றிய கவுன்சிலருமான அலமேலு  தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தகண்டன  ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜெயசங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ஏழுமலை, மேற்கு ஒன்றிய செயலாளர் மோகன், மாவட்டக்குழு உறுப்பினர் அய்யனார் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். கண்டன உரையின் போது ஆத்தூர், நன்னாவரம் ஆகிய ஊராட்சிகளில்  உள்ள பெரிய ஏரி, குளம்  பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பயன்பாட்டிற்கு  கொண்டுவர வேண்டுமெனவும், புத்தனந்தல் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரை அருகில் உள்ள பிள்ளையார்குப்பம், ஆத்தூர் கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை தூர்வாரி பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டுமென தமிழக அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, கிளைகழக நிர்வாகிகள் என 100-க்கும்  மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

72 + = 77