கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி விழா நடைபெற்றது. இவ்விழாவில் தனியார் மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவர்கள், தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரியில் பயிலும் மாணவிகள் மற்றும் அரசு மருத்துவர்கள் தனியார் தொண்டு நிறுவனங்கள் சேர்ந்த ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டு எய்ட்ஸ் இல்லாத சமூகத்தை உருவாக்குவோம், எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களை அறவணைப்போம், அனைவரையும் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள ஊக்குவிப்போம் உள்ளிட்ட எயிட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பேரணியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு பேருந்து நிலையம் வழியாக அரசு மருத்துவமனை வரை இரத்ததானம் செய்வோம், இன்னுயிர் காப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.