Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

திருப்புவனம் வைகையாற்றில் குடில் அமைத்து விடிய, விடிய குலதெய்வ வழிபாடு 5 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கிராம திருவிழா

திருப்புவனத்தில் உள்ள வைகையாற்றில் பச்சை ஓலையில் குடில் அமைத்து பூஜையறை பெட்டி வைத்து விடிய, விடிய குலதெய்வ வழிபாடு நடத்தினர். இதில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம்,...
Homeஅறிவியல் & தொழில்நுட்பம்உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு வரலாற்றுசின்னங்களை பாதுகாப்பதை வலியுறுத்தி கந்தர்வகோட்டை அரசுப்பள்ளி மாணவர்கள் பேரணி

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு வரலாற்றுசின்னங்களை பாதுகாப்பதை வலியுறுத்தி கந்தர்வகோட்டை அரசுப்பள்ளி மாணவர்கள் பேரணி

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு வரலாற்று சின்னங்களை பாதுகாப்பதை வலியுறுத்தி பேரணியும், கந்தர்வகோட்டை சிவன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை வாசிப்பதற்கான பயிற்சியும் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் நிகழ்த்தப்பட்டது. முன்னதாக பேரணியை பள்ளித் தலைமை ஆசிரியர் வே. பழனி தொடங்கி வைத்து பயிற்சிக்கு தலைமை வைத்தார், நிகழ்வில்

பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சௌ.தெய்வீகன் அனைவரையும் வரவேற்றார், பாலசுப்ரமணியம் குருக்கள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா சிவா சிவனடியார் குழுவைச் சேர்ந்த பாலமுருகன், தொல்லியல் ஆர்வலர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கலியபெருமாள், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வை தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் ஒருங்கிணைத்து, கல்வெட்டு வாசிப்பு பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்கினார், சிவன் கோவிலில் உள்ள பழமையான பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டு கருவறைத்தூணில் காணப்படுகிறது. 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கோயில் முன்மண்டப பலகைக் கல்லில்  காணப்படுகிறது. தூண்களில் 14, 15ஆம் நூற்றாண்டு  வரையிலான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பல்வேறு காலகட்டங்களை சேர்ந்த கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துருக்களின் மாறுபாடுகள் குறித்து எடுத்துக்கூறி மாணவர்கள் வாசிப்பதற்கு பயிற்சி வழங்கப்பட்டது, தொடர்ந்து கல்வெட்டுகளை படையெடுப்பதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டது .

அப்போது மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்து கல்வெட்டுகளை படியெடடுத்தனர் , இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பாளர் எம்.சீனிவாசன், பள்ளி ஆசிரியர்கள் ஓ.சித்ராதேவி, எஸ்.பாத்திமா, அய்யப்பன், ஆர்.செல்வமணி,சரவணன் மற்றும் அருந்ததிதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

x
error: Content is protected !!
%d bloggers like this: