உலக கோப்பை கிரிக்கெட் – நியூசிலாந்து அணி அறிவிப்பு : கேன் மீண்டும் கேப்டன்

ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

காயத்தால் அவதிப்பட்டு வந்த கேன் வில்லியம்சன் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐசிசி உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்.5 – நவ.19 வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த கேன் வில்லியம்சன் மீண்டும் தலைமை பொறுப்பேற்கிறார்.

2019 உலக கோப்பையில் விளையாடிய 10 அணிகளின் கேப்டன்களில் 9 பேர் மாற்றப்பட்டுவிட்ட நிலையில், 2023 தொடரில் வில்லியம்சன் மட்டுமே கேப்டனாக நீடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய களத்தை கருத்தில் கொண்டு ஈஷ் சோதி, மிட்செல் சான்ட்னர், ஆல் ரவுண்டர் ஜிம்மி நீஷம் என 3 சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். பெரும் எதிர்பார்ப்புடன் கிரிக்கெட் நியூசிலாந்து 15 பேர் கொண்ட அணியை உலக கோப்பைக்காக அறிவித்துள்ளது. வில்லியம்சன் அணியுடன் இணையும் வரை, துணை கேப்டன் டாம் லாதம் அணியை வழிநடத்துவார்.

அணி விவரம்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, லோக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம் (துணை கேப்டன்/விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், ஈஷ் சோதி, டிம் சவுத்தீ, வில்லியம் யங்.