உலக கழிப்பறை தின விழிப்புணர்வு பேரணி

உலக கழிப்பறைகள் தினத்தையொட்டி, கந்தர்வகோட்டையில் கந்தர்வகோட்டை ஊராட்சி நடுநிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி இன்று நடைபெற்றது.

கந்தர்வகோட்டை ஒன்றிய பெருந்தலைவர் ரெத்தினவேல் கார்த்திக் மழவராயர் தலைமையில் பேரணி நடைபெற்றது. பேரணியில் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ., சின்னதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதரன், நளினி, அரசு அலுவலர்கள், கந்தர்வகோட்டை ஊராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவிகள், மகளிர் சுய உதவி குழு அமைப்புகளை சேர்ந்த மகளிர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கந்தர்வகோட்டை ஒன்றிய அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணி காந்தி சிலை, மாரியம்மன் கோவில் வீதி, பெரிய கடைவீதி, மெயின் ரோடு வழியாக மீண்டும் ஒன்றிய அலுவலகம் சென்றடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 2