உலக ஓசோன் பாதுகாப்பு தினம் குளத்தூர்நாயக்கர்பட்டி அரசு  உயர்நிலைப்பள்ளியில் கடைபிடிக்கப்பட்டது.

உலக ஒசோன்  தினத்தை முன்னிட்டு  குளத்தூர்நாயக்கர்பட்டி அரசு  உயர்நிலைப்பள்ளியில் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் இரா.பெரியசாமி தலைமை வகித்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் இரா.குணசேகரன் வரவேற்றார். அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் அ.ரகமதுல்லா முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் பேசியதாவது

புவி மண்டலத்திலிருக்கும் ஓசோன் படலம் தான், நம்மை சூரியனிலிருந்து வரும் புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது. ஓசோன் படலம் என்பது நமது பூமியை போர்த்தியிருக்கும் ஒரு மெல்லிய வாயுப் படலமாகும். இது ஆக்ஸிஜனின் ஒரு வடிவம் ஆகும் (O3). அதாவது மூன்று ஆக்சிஜ‌ன் அணுக்கள் சேர்ந்தது ஒரு ஓசோன் மூலக்கூறு ஆகும். ஓசோனின் முக்கிய பணியே சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்களை தடுத்து பூமியில் உள்ள உயிர்களை பாதுகாப்பதுதான். ஸ்ட்ரேட்டோஸ்பியரில் உள்ள ஓசோனின் அளவு 1 சதவீதம் குறைந்தாலும் பூமியை வந்து அடையும் புற ஊதாக்கதிரின் அளவு அதிகரித்து உயிரிகளின் டிஎன்ஏ வை நேரிடையாக பாதிக்கும். இதனால் அனைவரும் கடலுக்கு அடியிலோ தரைக்கு அடியிலோ பதுங்க வேண்டிய நிலை ஏற்படும். உயிரினங்கள் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். எனவே தான் இந்த ஓசோனை பாதுகாக்க வலியுறுத்தி, ஆண்டுதோறும் செப்.16 ஆம் தேதி “சர்வதேச ஓசோன் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. ஆம் இன்று ஒசோனுக்கு பிறந்த நாள் என்றும் சொல்லலாம்.

ஓசோன் படலம், சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதா கதிர்களில் 93 சதவீதத்தை தடுக்கிறது. 1913 ஆம் ஆண்டு சார்லஸ் பேப்ரிக் மற்றும் ஹென்றி பாய்சன் ஆகிய இருவரும் இணைந்துதான் இந்த ஓசோன் படலத்தை கண்டுபிடித்தனர். ஆனால் பெரும்பாலும் ஆபத்தையே தரும் இந்த ஓசோன் கதிர்கள் தோல்புற்று நோயை உருவாக்கக்கூடியவை. இதனால் உலகில் ஆண்டுதோறும் 66 ஆயிரம் பேர் பலியாகின்றனர் என்பதையும் இவை பயிர்களையும் பாதித்து உணவுச்சங்கிலியை சீர்குலைக்க கூடியவை என்பதையும் யாரும் மறந்து விடக்கூடாது.

என்றும் இதனை தொடர்ந்து ஐ.நா சார்பில் 1987-ல் ஒசோனை பாதுகாக்க “மான்ட்ரியல் வரைவு ஒப்பந்தம்’ தயாரானது. கிட்டத்தட்ட 191 நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்நாளையே 1994 ல் சர்வதேச ஓசோன் தினமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அறிவித்தது. இதனால் இப்போதெல்லாம் இந்த ஓசோன் துளை பெரிதாவது தவிர்க்கப்பட்டாலும், ஓசோனுக்கு நிகழ்ந்த பாதிப்பு கொஞ்சமும் சரி செய்யப்படவில்லை என்பது சோகம்தான். ஏகத்துக்கு முயற்சி செய்தாலும் ஓசோன் துளை மறைய நீண்ட காலமாகும் என கருதுகின்றனர். அதே சமயம் 2006க்கு பிறகு ஓசோன் துளை அளவு குறைந்திருந்தது. இதே நிலை நீடித்தால் 2050-ஆவது ஆண்டுக்குள்ளாவது ஓசோன் துளை மறைந்துவிடும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். என்றும் பேசினார்

அதனைத் தொடர்ந்து மாவட்ட இணை செயலாளர் எம்.சிவானந்தம் மந்திரமா? தந்திரமா? என்ற அறிவியல் விழிப்புணர்வு மாணவர்கள் செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சாந்தகுமாரி, காளியம்மாள், வெள்ளையம்மாள், தர்மாபாய், ராதா அங்காளேஸ்வரி, சங்கர் ஓவிய ஆசிரியர் பூபதி, ஆய்வக உதவியாளர் முத்துலெட்சுமி, பயிற்சி ஆசிரியர் கௌசல்யா, ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். நிறைவாக உதவி தலைமை ஆசிரியர் ப.சிவசங்கரன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

91 − = 85