உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21.25 கோடியை தாண்டிய நிலையில், பலியானோர் எண்ணிக்கை 44.44 லட்சத்தை தாண்டியது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் இன்று காலை வரையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 21,25,83,644 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 44,44,390 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
அதேசமயம் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19,01,97,556 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,11,524 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள முதல் 5 நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.