உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20.29 கோடியை தாண்டியது : பலி எண்ணிக்கை 43 லட்சத்தை நெருங்கியது

closeup of a caucasian doctor man holding a world globe with a protective mask with the word coronavirus written in it

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20.29 கோடியை தாண்டிய நிலையில், பலியானோர் எண்ணிக்கை 43 லட்சத்தை நெருங்கியது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் இன்று காலை வரையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 20,29,52,988 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 42,99,268 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

அதேசமயம் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18,22,94,738 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 98,545 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள முதல் 5 நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.