உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 கோடியை தாண்டியது : 42.58 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலி

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 கோடியை தாண்டிய நிலையில், 42.58 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் இன்று காலை வரையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 20,02,35,074 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 42,58,448 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

அதேசமயம் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18,05,03,988 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 92,417 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள முதல் 5 நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar Articles

Comments

Advertismentspot_img

Instagram

Most Popular

x
error: Content is protected !!
%d bloggers like this: