உலகில் ஒற்றுமையும் அமைதியும் இப்போது அவசியம் – பிரதமர் மோடி அறிவுரை

உலகில் ஒற்றுமையையும், அமைதியையும் நிலைநாட்ட வேண்டியது தற்போது மிக முக்கியமான கடமை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள யஷோபூமியில் ஜி20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்களின் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட ஜி20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார். இந்தியாவுடனான நட்புறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், கனடா புறக்கணித்துள்ளது.

இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “ உலகில் ஒற்றுமையையும், அமைதியையும் நிலைநாட்ட வேண்டியது தற்போது மிக முக்கியமான கடமை. இந்தியாவும் நாடாளுமன்ற வளாகத்திலேயே தீவிரவாத தாக்குதலை எதிர்கொண்டது. அது அனைத்தையும் வெற்றிகரமாக முறியடித்தது. அதைப்போல ஒரு சூழ்நிலை தற்போது நிலவுகிறது. அதை நாம் வெற்றிக்கொள்ள வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறினார்.