உயர்கல்வியில் சேராத 5 மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அட்வைஸ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்தவர்கள், உயர்கல்வி சேர்ந்துள்ளார்களா! என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் போது, சில மாணவர்கள், குடும்ப சூழல், நிதி பற்றாக்குறை, உயர் படிப்பில் சேர ஆர்வமின்மை, தொழில் செய்தல், அருகில் கல்லுாரி இல்லாதது போன்ற காரணங்களால் உயர் கல்வியை தொடராமல் இருப்பது தெரியவந்தது. இவர்கள் உயர் கல்வியை தொடங்குவதற்கு ஏதுவாக பள்ளிக்கல்வித்துறை சார்பில், சிறப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடந்தது. முகாமில், பன்னிரண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வியில் சேராத மாணவர்கள் 2 பேர் மற்றும் மாணவிகள் 3 பேர் என மொத்தம் 5 பேருக்கு ஆலோசனை வழங்கி அவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கான பரிந்துரை கடிதத்தை புதுக்கோட்டை மாவட்ட உதவி திட்ட அலுவலர் தங்கமணி வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதந்திரன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர் ராஜ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் மற்றும் வீரப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 32 = 35