
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரை சேர்ந்த 16 வயது சிறுமி சம்பவத்தன்று வீட்டில் இருந்தார்.
அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு வாலிபர் அவளை மாட்டுத்தொழுவத்தை சுத்தம் செய்ய வருமாறு அழைத்து சென்றார். அந்த சமயம் அதே பகுதியை சேர்ந்த மேலும் 2 பேர் அங்கு வந்தனர். பின்னர் 3 பேரும் அந்த சிறுமியை கத்திமுனையில் காரில் கடத்தி சென்றனர். ஓடும் காரில் 3 பேரும் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தனர். இதையடுத்து மயக்கம் அடைந்த சிறுமியை மாட்டுத் தொழுவத்துக்கு வெளியில் வீசி விட்டு சென்று விட்டனர்.
சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த அந்த சிறுமி தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.