உதயநிதி ஸ்டாலினின் “கலகத்தலைவன்” படம் வெளியீடு! தென்காசி தி.மு.க., நிர்வாகிகள், ரசிகர்களுக்கு லட்டு வழங்கல்

தென்காசி மாவட்டம், புளியங்குடி மீனாட்சி திரையரங்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்த கலகத்தலைவன் திரைப்படத்தை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ.,வுமான  ராஜா தலைமையில், புளியங்குடி நகர்மன்ற தலைவர் விஜயா சௌந்தர பாண்டியன், நகரச் செயலாளர் அந்தோணிசாமி முன்னிலையில் முதல் காட்சியை ரசிகர்களுக்கு லட்டு வழங்கி தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், நகர துணைச் செயலாளர் காந்திமதி அம்மாள், சாகுல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகசாமி, சீனிவாசன், மாணவரணி விக்ரம் மணிகண்டன், புளியங்குடி நகர அவைத் தலைவர் வேலுச்சாமி பாண்டியன், பொண்ணு துரைச்சி, வாசு தேவநல்லூர் பேரூர் செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியம், ஒன்றிய செயலாளர் பொன் முத்தையா பாண்டியன், மாவட்ட பிரதிநிதி சுரேஷ், நகர் மன்ற உறுப்பினர் 17வது வார்டு கார்த்திக், சக்தி ஐயப்பன், அருணாச்சலம், ராஜா பாண்டியன், ரெஜிலா, அண்ணாமலை, கவிதா மாரியப்பன், மாவட்ட மருத்துவர் அணி செண்பக விநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு ரசிகர்களை வரவேற்று லட்டு வழங்கி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 6 =