உதயநிதி பிறந்த நாளில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு

தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் சார்பில் நடைபெற்ற நிகழச்சிக்கு, மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமை வகித்தார்.

மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் குருநாதன் கந்தையா, குடிமுறை மருத்துவ அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நவம்பர் 27ம் தேதி பிறந்த 5 குழந்தைகளுக்கும் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் தி.மு.க., சார்பில் அணிவிக்கப்பட்டது. மேலும், அரசு மருத்துவமனையில் பிரசவித்த அனைத்து தாய்மார்களுக்கும் பேபிகிட் அன்பளிப்பாக வழங்கினர்.

இதில், மாவட்ட துணை செயலாளர்கள் ஞானவேலன், செல்வமணி, மாவட்ட பொருளாளர் அலெக்ஸாண்டர், ஒன்றிய செயலாளர்கள் இமயநாதன், மங்கைசங்கர், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து- மகேந்திரன், சிவதாஸ், நகர துணை செயலாளர் சங்கர் உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 8 = 17