
உடையார்பாளையம் அருகே எம்.ஆர்.சி கல்வி நிறுவனங்கள் சார்பாக பாரதியார் நினைவு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இது பற்றி கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். ஆர். ரகுநாதன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அடுத்துள்ள, தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் சார்பாக, மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு நாள் கருத்தரங்கம் நடத்தப்பட்டது .இதில் அவரது வாழ்க்கை வரலாறு, அவர் எழுதிய நூல்கள், இலக்கியம், விடுதலை போராட்டம், பெண் விடுதலை, கவிதைகள் மற்றும் அவருடைய தமிழ்ப்பணி உள்ளிட்டவை பற்றிய கருத்துக்களை, பேராசிரியர்கள் வே.சதீஷ்குமார், குருநாதன் , அஜித் ஆகியோர் எடுத்துரைத்தனர்.
கருத்தரங்கில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.