உடையார்பாளையம் அருகே எம்ஆர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா

உடையார்பாளையம் அருகே எம்.ஆர்.பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. இது பற்றி தத்தனூர் எம்.ஆர்.சி கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரகுநாதன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் எம் ஆர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் தொடர்பான கவிதை, கட்டுரை, ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

ஆசிரியர்களின் தலைமைப் பண்புகள் குறித்து, கல்லூரி விரிவுரையாளர்கள் பேசினார்கள். மாணவர்களும், தங்களது பள்ளி,கல்லூரி ஆசிரியர்கள் குறித்து பேசினார்கள். அதனை தொடர்ந்து அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்வி நிறுவனங்களின் தாளாளர்  சார்பாக  பேனா வழங்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.