உடல்நலம் பாதிக்கப்பட்ட பிதாமகன் பட தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு உதவுவதாக நடிகர் ரஜினிகாந்த் உறுதி

உடல்நலம் பாதிக்கப்பட்ட பிதாமகன் பட தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு உதவுவதாக நடிகர் ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளார். வி.ஏ.துரையை செல்போனில் தொடர்பு கொண்டு நான் பார்த்துக் கொள்கிறேன் கவலைப்படாதீர்கள் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்ததும் வி.ஏ.துரையை நேரில் வந்து பார்ப்பதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். பிதாமகன், கஜேந்திரா, லூட்டி, லவ்லி உள்பட 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை. இவர் நீரிழிவு நோய்க்கு உள்ளாகி பார்த்துக்கொள்ள யாரும் இல்லாமல், பணமும் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்.

இவர் ரஜினி, சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுடன் மிகவும் நெருக்கமான ஒருவராக இருந்தவர். ஆனால் தற்போது நீரிழிவு நோயால் நடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். அவரது மருத்துவ செலவுகளை சமாளிப்பதற்காக உதவி கோரி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். மேலும் வி.ஏ துரை ரஜினி தன்னுடைய 40 வருட நண்பர் என்றும், தன்னுடைய நிலைமையை அவரிடம் எடுத்துக் கூற வேண்டும் எனவும், தயாரிப்பாளர்கள் சங்கமும் திரைத்துறையினரும் உதவ முன் வர வேண்டும் எனவும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது நடிகர் கருணாஸ் ரூ.50 ஆயிரம் பண உதவி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிதாமகன் படத்தில் நடிக்க நடிகர் கருணாஸ்க்கு தயாரிப்பாளர் துரை ரூ.50,000 கொடுத்துள்ளார். அந்த தொகையை துரையின் மருத்துவ செலவுக்கு கொடுக்கிறேன் என்று நடிகர் கருணாஸ் கூறியுள்ளார். தயாரிப்பாளர் துரையின் நிலை அறிந்து நடிகர் சூர்யாவும் ரூ.2 லட்சம் உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட பிதாமகன் பட தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு உதவுவதாக நடிகர் ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 3