உடல்நலக்குறைவால் அருணகிரிநாதர் காலமானார்

உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டியிருந்த மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் நேற்று காலமானார்.

தமிழகத்தில் உள்ள மிக பழமையான சைவ சமய திருமணங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்திற்கு தலைமை வகிப்பவர் ஆதீனம் என்று அழைக்கப்படுகிறார். இதில் அருணகிரி ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி என்பவர் 292வது ஆதீனம் ஆகவுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மதுரை ஆதீனம் மிகவும் கவலைக்கிடமான இருப்பதாகவும், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மதுரை ஆதீனம் அருணகிரி நாதர்(77 வயது) சிகிச்சை பலனின்றி காலமானார்.

அருணகிரிநாதர் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்து மத தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.