உக்ரைனில் அடுக்குமாடி குடியிருப்பு மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் பலி

உக்ரைன் – ரஷ்யா போர் ஓராண்டை கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

உக்ரைன் நகரம் மீது அவ்வப்போது ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருகிறது. உக்ரைன் நாட்டின் ஜபோரிஜ்ஜியா நகரில் மக்கள் வசிக்க கூடிய, 5 அடுக்குமாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் மீது ரஷ்யா ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் கட்டிடம் முற்றிலும் சேதமடைந்தது. இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உள்ளது.

குடியிருப்பு கட்டிடத்தில் தாக்குதல் நடத்திய ரஷ்யாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, எங்களது மக்களுக்கு ஒவ்வொரு நாளையும் பயங்கர நாளாக மாற்றுவதற்கு அந்த பயங்கரவாத நாடு விரும்புகிறது என ரஷியாவை குறிப்பிட்டார். ஆனால், எங்களது நிலத்தில் தீங்கு செய்பவர்கள் ஆட்சி செய்ய முடியாது. ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரையும் நாங்கள் ஓட ஓட விரட்டுவோம். ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்திற்கும் அவர்களே முழு அளவில் பொறுப்பாவார்கள் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 4