ஈரோட்டில் உலக நன்மை, விவசாயம் செழிக்க 10,000 இஸ்லாமியர்கள் கூட்டுப் பிரார்த்தனை

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருந்தேவன் பாளையத்தில் இஸ்லாமிய ஆண்கள் மட்டுமே பங்கேற்ற இஸ்திமா என்னும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய உலமாக்கள் பங்கேற்று (அல்லாஹ்) இறைவனை பற்றியும், இறைத்தூதர் நபிகள் நாயகம் வாழ்வியல் குறித்தும், நபி தோழர்களின் வரலாறுகள் குறித்தும் விளக்கினர்.

இதையடுத்து உலக நன்மைக்காக வேண்டியும், பெருந்தொற்று நோய்களிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நெசவுத்தொழில் சிறப்படையவும் சிறப்புத் தொழுகை, சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசி மோகன் உத்தரவிற்கிணங்க, மொடக்குறிச்சி காவல் ஆய்வாளர் தீபா தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 4