ஈரோடு கிழக்கு தொகுதியில் பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணி தொடக்கம்

வரும் 25-ந் தேதி மாலையுடன் பிரசாரம் நிறைவு பெறுவதால் தலைவர்கள் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர். தற்போது தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களை கட்டி உள்ளது.

 கிழக்கு தொகுதியில் எந்த வீதிகளில் சென்றாலும் அரசியல் கட்சியினர் ஊர்வலமாக சென்று தீவிரமாக வாக்குகள் சேகரித்து வருகிறார்கள். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணி இன்று காலை முதலே நடைபெற்று வருகிறது. 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வீடு, வீடாகச்சென்று பூத் சிலிப் வழங்கி வருகின்றனர். வரும் 25-ம் தேதி வரை பூத் ஸ்லிப் வாக்காளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். 2.27 லட்சம் வாக்காளர்கள் உள்ள இந்த தொகுதியில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் மொத்தம் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + = 26