ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தபடும் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தபடும் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரிசத்யபிரதா சாகு இன்று வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்: 01.01.2023-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம். 2023-ன் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியலில் இனிமேலும் பெயர் சேர்க்க முடியும். 17 வயது பூர்த்தியானவர்களும் விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து கொடுக்கலாம். 18 வயது ஆனதும் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு விடும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரு வருடத்தில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய 4 மாதங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பணிகள் நடைபெறும். என்றார். ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக புலம்பெயர்ந்த வாக்காளர்கள் ரிமோட் மூலம் வாக்களிப்பதற்கான ஆலோசனை கூட்டத்துக்கு அ.தி.முக.வுக்கு எத்தனை கடிதம் அனுப்பினீர்கள்? என்ற கேள்விக்கு. முதலில் ஆள் மூலம் கொடுத்து அனுப்பினோம். அதை வாங்க மறுத்ததால் ஸ்பீடு தபாலில் அனுப்பி வைத்தோம். அவர்கள் அதை திருப்பி அனுப்பிய தகவலை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்து விட்டோம் என்றவர்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மரணம் அடைந்து விட்டார். இதுகுறித்து தலைமை தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவித்து விட்டீர்களா? அங்கு எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என்ற கேள்விக்கு 1 தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டால் அங்கு 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் விதியாகும். அந்த அடிப்படையில் ஈரோடு தொகுதி எம்.எல்.ஏ. மரணம் அடைந்துள்ளதால் இதுபற்றி தமிழக சட்டபேரவை செயலகத்தில் இருந்து இன்று [ஜனவரி5]எனக்கு தகவல் தருவார்கள். அதை இந்திய தேர்தல் பிரிவுக்கு அனுப்பி வைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 6