தென்காசி மாவட்டம், நன்னகரம் பகுதியில் வசித்து வருபவர் நாகூர் மீரான் தொழிலதிபரான இவர் பாதயாத்திரையாக செல்லும் ஐயப்பன், மற்றும் முருக பக்தர்களுக்கு அன்னதானம், ஏழை எளியோருக்கு மருத்துவ உதவிகள் போன்று மத வேறுபாடின்றி எண்ணற்ற உதவிகள் செய்து வருகின்றார். அனைத்து மத பண்டிகைகளையும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக நடத்தி வருகிறார். அதன்படி தமிழர் திருநாளான தைப்பொங்கலை ஆட்டோ ஓட்டுனர்கள் கொண்டாடும் வகையில் தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு பொருட்களும், சீருடைகளும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் கலந்து கொண்டு ஆட்டோ ஒட்டுனர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து சாலை பாதுகாப்பு குறித்த அறிவுரைகள் வழங்கி பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார். இந் நிகழ்ச்சியில் நாகூர் மீரான் மனைவி ரூபியா வழக்கறிஞர்கள் அய்யூப் ஜான் பீட்டர் நசீர் சதீஷ் ராக்கி வகாப் வெற்றி வேல் மதினா சுடரொளி மணிகண்டன் பார்டர் மாரி அசோக் ஒயிட் மற்றும் தாரணி சிவகுமார் ஷாலினி பிலால் காவியா இர்ஃபான் ரிமோன் அசோக் பிரதிக்ஷா சித்ரா ப்ரியா
உள்ளிட்ட தென்காசி மேலகரம் குற்றாலம் இலஞ்சி வல்லம் பகுதிகளை சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நாகூர் மீரான் அனைவருக்கும் நன்றி கூறினார்.