இஸ்ரேல் சென்ற அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி

அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் இஸ்ரேல் சென்றுள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர். இது உலக நாடுகளை கவலையடைய செய்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் இஸ்ரேல் சென்றுள்ளார். அமெரிக்காவின் ஆதரவை உறுதிப்படுத்தும் வகையில் அவர் இஸ்ரேலுக்கு வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைப்போலவே நேற்று முன்தினம் வியாழக்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கென் இஸ்ரேல் சென்றார். அங்கு பிளிங்கென், இஸ்ரேல் அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்து பேசினார்.