இளைஞரணி செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின்: தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

தி.மு.க.,வின் 15வது உட்கட்சித் தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின், மகளிர் அணித் தலைவராக விஜயா தாயன்பன், மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இளைஞர் அணி துணைச் செயலாளர்கள், மகளிர் அணி செயலாளர், இணை செயலாளர், துணை செயலாளர்கள், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளர்கள், மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் ஆலோசனைக் குழு பொறுப்பாளர்கள் ஆகியோரின் பெயர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தி.மு.க., இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி தேர்வு செய்யப்பட்டார். தற்போது இரண்டாவது முறையாக அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

88 − = 82