இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க அரசு நிதியுதவி : தமிழக அரசு அறிவிப்பு

இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க அரசு நிதியுதவி அளிக்கும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் பல்வேறு புதிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் செய்தித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் சாமிநாதன், பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிகையாளர்களுக்கான குடும்ப நிதி உதவி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்றும்,

இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க அரசு நிதியுதவி வழங்கப்படும் எனவும், பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.