இல்லம் தேடி கல்வி மையத்தில்  பாகுபாடு காட்டக்கூடாது- அன்னவாசல் வட்டாரக் கல்வி அலுவலர்

 இல்லம் தேடி கல்வி மையத்திற்கு  கல்வி கற்க வரும் மாணவர்களிடம் தன்னார்வலர்கள் பாகுபாடு காட்டக்கூடாது என  அன்னவாசல் வட்டாரக் கல்வி அலுவலர் அலெக்ஸாண்டர் பேசினார்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்  கல்வி அலுவலர் சாமி .சத்தியமூர்த்தி வழிகாட்டுதலின்படி அன்னவாசல்  ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி தொடக்க நிலை  தன்னார்வலர்களுக்கான  பயிற்சி அன்னவாசல் வட்டார வள மையத்தில் நேற்று நடைபெற்றது.  

பயிற்சியினை  அன்னவாசல் வட்டாரக் கல்வி அலுவலர் அலெக்ஸாண்டர் தொடங்கி  வைத்தார். மேலும் பயிற்சியில் அன்னவாசல்  வட்டாரக் கல்வி அலுவலர் கலா,வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரோஸ்மேரி சகாயராணி( பொறுப்பு) இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.இப்பயிற்சியில்  தொடக்க நிலை வகுப்புகளை கையாள உள்ள 40 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.  

இதில் தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களை எளிமையாக வாசிப்பது மற்றும் எழுதுவது,  எளிய கணித செயல்பாடுகளை செய்யும் வழிமுறைகள்,  எளிய  பரிசோதனை மூலமாக அறிவியல் செயல்பாடுகளை செய்யும் வழிமுறைகள் குறித்து வட்டார வளமைய பயிற்றுநர்கள் ஜோசப் ரொசாரியோ கில்பர்ட் ,விஜயகுமார்,மனோகரன்,கவிதா மற்றும் ஆசிரியர்கள் எழுவன் சீனிவாசன்,செந்தில்,ஆனந்தராஜ் ஆகியோர் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 4 = 1