இலுப்பூர் மலைக்குடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் மன்ற தொடக்கவிழா

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், மலைக்குடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சமூக அறிவியல் மன்ற தொடக்கவிழா மற்றும் 12ம் வகுப்பிற்குப் பின் என்ன படிக்கலாம் என்ற பயிலரங்கத்திலும் உரையாற்றிய புதுக்கோட்டை வாசகர் பேரவை செயலர் சா.விஸ்வநாதன் இவ்வாறு குறிப்பிட்டார்.

சர்வோதயத்தில் எந்த வேலையும் இழிவானதல்ல என்று சொல்வதுபோல் படிப்பில் எந்தப் படிப்பும் மதிப்புக் குறைந்ததல்ல, எல்லாப் படிப்பும் வாழ்க்கைக்கு பயன்படும். ஆனால் நாம் எப்படிப் படிக்கிறோம் என்பதுதான் முக்கியம்  என்று கூறினார், முன்னதாக பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் அசோக்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார், சமூக அறிவியல் ஆசிரியர் அண்ணாத்துரை வரவேற்புரை ஆற்றினார், நிகழ்வில் ஆசிரியர்கள் மணிகண்டன், சுரேஷ் , சுப்பிரமணியன், ஆறுமுகம் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பெருமளவில் பங்கேற்றனர், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வாசகர் பேரவை சார்பில் வெண்மை புத்தகம் வழங்கப்பட்டது, நிறைவாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஆசிரியர் அழகேந்திரன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 5