
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே கடந்த ஆண்டு 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்புணர்பு செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற இளைஞர் இலுப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. விசாரணையில் குற்றம் உறுதியானதையடுத்து குற்றவாளி ரஞ்சித்திற்கு சிறுமியை கடத்தியது மற்றும் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் 17 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபதாரம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் அரசு இழப்பீடு வழங்கவும் நீதிபதி சத்யா உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து குற்றவாளி ரஞ்சித் பலத்த பாதுகாப்போடு அழைத்துச் செல்லப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.