புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் பஞ்சபூதா சர்வதேச தற்காப்பு கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற ஒன்பதாம் ஆண்டு மாநில அளவிலான யோகா போட்டிகளை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இலுப்பூரில் உள்ள மதர்தெரசா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 9ம் ஆண்டு யோகா போட்டிகள் காலையில் தொடங்கி மாலை வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 400க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கல்லூரி நிறுவனர் சின்னத்தம்பி, தாளாளர் உதயகுமார், பொறியியல் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன், உடற்கல்வி கல்லூரி முதல்வர் ஞானவேல், பள்ளி முதல்வர் கவிதா, தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் சதீஷ்குமார், பயிற்சியாளர் ராஜ்குமார் கலந்துகொண்டு பாராட்டி சான்றிதழ்களை வழங்கினர்.
ஒட்டுமொத்த சாம்பியன்ஸ் பட்டத்தை துவரங்குறிச்சி டி.எம்.ஐ, குளோபல் பள்ளி பெற்றுள்ளது அவர்களுக்கான சாம்பியன்ஷிப் பதக்கத்தை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்