இலுப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்

இலுப்பூர் வருவாய் கோட்டாச்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமை வகித்தார். கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழ்மணி முன்னிலை வகித்தார்.

முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவக்குழு மூலமாக தேசிய அடையாள அட்டை, மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, வங்கிக்கடன் உதவி, உபகரணங்கள் பெறுவதற்காக மாற்று திறனாளிகளிடம் மனுக்கள் பெறப்பட்டு ஊனமுற்ற அளவீடு செய்து ஆய்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை, மற்றும் காதுகருவி, ஊன்றுகோல், கைதாங்கி உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. முகாமில் மாவட்ட மாற்றுத்திறன் அலுவலர் உலகநாதன், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் வேல்முருகன், மாவட்ட தொழில்மைய உதவி பொறியாளர் மதுசூதனன், தாசில்தார்கள் (இலுப்பூர்) வெள்ளைச்சாமி, ரவிசந்திரன், (குளத்தூர்) சதீஷ் சரவணக்குமார், சக்திவேலு, (விராலிமலை) வளர்மதி, (பொன்னமராவதி) பழனிச்சாமி, பிரகாஷ், உள்ளிட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்துறை அதிகாரிகள், அலுவலர்கள், மக்கள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 7 =