இலவச பிரியாணி : கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

அருப்புக்கோட்டையில் இலவசமாக பிரியாணி வழங்கி தொற்று பரவும் வகையில் கூட்டத்தை கூட்டியதாக உணவக உரிமையாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு போடப்பட்டுள்ளது.

 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உணவக திறப்பு விழா சலுகையாக வெள்ளை வேட்டி, சட்டை மற்றும் திமுக கரைவேட்டி அணிந்து வருபவர்களுக்கு பிரியாணி இலவசம் என அறிவிக்கப்பட்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை பொருட்படுத்தாமல், சுமார் 3 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பிரியாணி வாங்கிச் சென்றனர்.

 இந்த நிலையில், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக தனியார் உணவக உரிமையாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.